உ.பி: ஆதார் மையங்களை தவறாக பயன்படுத்த முயற்சி; பத்து பேர் கைது

ஆதார் அடையாள அட்டை வழங்கும் மையங்களின் சங்கேத குறியீடுகளை பயன்படுத்தி முறைகேடுகள் செய்ய முயன்றதாக உத்தரபிரதேசத்தில் பத்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
உ.பி: ஆதார் மையங்களை தவறாக பயன்படுத்த முயற்சி; பத்து பேர் கைது
Published on

புதுடெல்லி

இது தொடர்பாக ஆதார் வழங்கும் நிறுவனமான உய்தாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் உத்தர பிரதேசத்தின் சிறப்பு புலனாய்வுக் குழு கான்பூர் மற்றும் அதன் அருகாமை மாவட்டங்களில் விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் ஆதார் வழங்கும் மையங்களின் பணிக்காக கொடுக்கப்பட்டிருக்கும் பயோமெட்ரிக் தகவல்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்செயல்பாடுகள் ஆதார் சட்டப் பிரிவு 34 இன் கீழ் தெளிவாக மீறப்பட்டுள்ளது. மேலும் இச் செயல்பாடுகளில் காணப்படுவது போன்று ஆள் மாறாட்டம் செய்வது போன்றவற்றை தங்களது கட்டமைப்பு தானாகவே காட்டிக்கொடுத்துவிடும் என்றும் அதன் அறிக்கை கூறுகிறது. தற்போதைய குற்றம் தொடர்பாக காவல்துறையிடம் தாங்கள் முறையிட்டததைத் தொடர்ந்து கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆதார் அமைப்பு கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com