

காஷ்மீர்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் இன்று காலை தீவிரவாதிகள் காவலர்கள் மீது கையெறி குண்டு ஒன்றை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனால் அந்த குண்டு தெருவில் விழுந்து வெடித்துள்ளது.
இதில் சிக்கி காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 2 பேர் காவலர்கள். கடந்த 4 நாட்களில் காஷ்மீரில் நடந்த 10வது தாக்குதல் இதுவாகும்.
இதனை தொடர்ந்த அந்த பகுதியை தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இதற்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.