சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

அடர்ந்த வனப்ப்குதியில் நடைபெற்ற சண்டையில் 10 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகள் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
Published on

சண்டிகர்,

சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப்படை வீரர்களுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் 10 மாவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

சிறப்பு அதிரடிப்படை (SIT) கோப்ரா (CoBRA) படை வீரர்களுடன் உள்ளூர் போலீஸ் குழுவினர் சேர்ந்து மெய்ன்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 10 மவோயிஸ்டுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராய்ப்பூர் சரக ஐஜி தெரிவித்துள்ளார். தேடப்பட்டு வந்த முக்கிய நபரான மனோஜ் உள்பட 10 பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com