முன்னாள் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு - சி.ஐ.எஸ்.எப். பொது இயக்குனர் அறிவிப்பு

முன்னாள் அக்னிவீரர்களுக்கு சி.ஐ.எஸ்.எப். கான்ஸ்டபிள் பணி காலியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy : PTI
Image Courtesy : PTI
Published on

புதுடெல்லி,

அக்னிபாத் திட்டம் 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 17 முதல் 21 வயதுடைய வீரர்கள், 4 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் மத்திய தொழிற்சாலைகள் பாதுகாப்பு படை எனப்படும் சி.ஐ.எஸ்.எப். துணை ராணுவ பிரிவின் பொது இயக்குனர் நினாசிங் மற்றும் எல்லை காவல் படை (பி.எஸ்.எப்.) இணை அதிகாரி நிதின் அகர்வால் ஆகியோர் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது நினாசிங் கூறியதாவது:-

"ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் படைவீரர்கள் அக்னிபாத் ஆள்சேர்ப்பு திட்டத்தில் குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் ஓய்வு பெற்றதும், அவர்களை மறுபணியமர்த்துவது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு முக்கிய முடிவு எடுத்துள்ளது.

அதன்படி முன்னாள் அக்னிவீரர்களை சி.ஐ.எஸ்.எப்.பில் சேர்ப்பதற்கான செயல்முறையை தயாரித்து வருகிறோம். அவர்களுக்கு இனிவரும் கான்ஸ்டபிள் பணி காலியிடங்களில் 10 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் வயது வரம்பு தளர்வுகள் உள்ளிட்ட விதிமுறைகள் பின்பற்றப்படும்."

இவ்வாறு அவர் கூறினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com