10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் - மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி

10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் என்று மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமும், அச்சமும் இன்றி உபயோகிக்கலாம் - மத்திய இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதப்படுவது குறித்து மத்திய அரசு கவனித்துள்ளதா என்று மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி பேசியதாவது:-

10 ரூபாய் நாணயம் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்டு மக்களுடைய பழக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் சட்ட பூர்வமாக நடைபெறக்கூடிய டெண்டர்கள் மற்றும் சட்டபூர்வ பரிவர்த்தனைக்கு பத்து ரூபாய் நாணயங்களை பயன்படுத்தலாம். எனினும் சில இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.

மக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த, அவ்வபோது ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு செய்திகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறது. மேலும், நாட்டு மக்கள் அனைவரும் 10 ரூபாய் நாணயத்தை எவ்வித தயக்கமுமின்றி உபயோகிக்க வேண்டும் என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com