குஜராத்: 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்

பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.
குஜராத்: 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
Published on: 

காந்தி நகர்,

குஜராத்தில் 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிக்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் 10 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பள்ளிகளுக்கு தனித்தனியே இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு குழுவினருடன் 10 பள்ளிகளும் தீவிர சோதனை நடத்தினர். மேலும், பள்ளிகளுக்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ, மாணவியர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

அதேபோல், பள்ளிகளில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com