பீகார் ரெயில் விபத்து காரணமாக 10 ரெயில்கள் ரத்து

பீகார் ரெயில் விபத்து எதிரொலியாக, 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பீகார் ரெயில் விபத்து காரணமாக 10 ரெயில்கள் ரத்து
Published on

பாட்னா,

டெல்லியின் ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாமின் காமாக்யா நோக்கிச் செல்லும் அதிவிரைவு ரெயிலின் 6 பெட்டி பீகாரில் உள்ள ரகுநாத்பூர் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 4 பேர் பலியானார்கள். பலர் காயம் அடைந்துள்ளனர். மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரெயில் விபத்து எதிரொலியாக, அந்த வழியாக செல்லும் பாட்னா-பூரி எக்ஸ்பிரஸ் உள்பட 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், தில்பர்க் எக்ஸ்பிரஸ், பரவ்னி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 21 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com