காஷ்மீரில் இருந்து 10,090 பேர் வெளியேறினர்

ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இருந்து 10,090 பேர் வெளியேறினர்
Published on

ஸ்ரீநகர்,

கோடை காலம் என்பதால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் காஷ்மீரில் குவிந்துள்ளனர். பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் பலர் சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல விரும்புகின்றனர். அதனால் கூடுதல் விமானங்களை இயக்குமாறு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில், பயங்கரவாத தாக்குதல் நடந்த காஷ்மீரில் இருந்து ஒரேநாளில் 10,090 சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இருந்து 10,090 பேர் வெளியேறிய நிலையில் 4,107 பேர் வருகை புரிந்தனர். ஸ்ரீநகரில் இருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 110 விமானங்கள் இயக்கப்பட்டதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து சொந்த மாநிலத்துக்கு திரும்பிச்செல்ல முண்டியடிக்கும் சுற்றுலா பயணிகளை அழைத்துவர கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் விமான கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com