வருமான வரி சோதனை; மராட்டிய ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.23½ கோடி பறிமுதல்

மராட்டியத்தில் ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் சொத்துகளில் முதலீடு செய்வதற்காக குறிப்பிட்ட வர்த்தகர்கள் செய்த பெரிய பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது.
வருமான வரி சோதனை; மராட்டிய ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.23½ கோடி பறிமுதல்
Published on

மராட்டிய மாநிலம் நாசிக்கை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபருக்கு சொந்தமான இடங்களில் சமீபத்தில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ.23 கோடியே 45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் சட்டவிரோதமாக ரூ.100 கோடிக்கு வருமானம் பெற்றதையும் கண்டறிந்தனர்.

இதுகுறித்து மத்திய நேரடி வரி வருவாய் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாசிக்கில் நடந்த சோதனையின்போது பெரிய நிலங்களை வாங்குவதற்காக கணக்கில் காட்டப்படாத வருமானத்தை முதலீடு செய்த முக்கிய நபர்களிடமும் சோதனை நடத்தப்பட்டது. இவர்களில் பெரும்பாலானவர்கள் பிம்பல்கான் பாஸ்வந்த் பகுதியில் வெங்காயம் மற்றும் பிற பண பயிர்களில் மொத்த வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சோதனையில் சொத்துகளில் முதலீடு செய்வதற்காக குறிப்பிட்ட வர்த்தகர்கள் செய்த பெரிய பண பரிவர்த்தனைகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளது. மேலும் சோதனையில் பிடிபட்ட பல வங்கி லாக்கர்களுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com