குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

குஜராத்,

குஜராத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாகவே உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அம்மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் குஜராத் மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலத்தில் இன்று மேலும் 1,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 65,704 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனா பாதிப்பால் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,534 ஆக அதிகரித்துள்ளது.

குஜராத் முழுவதும் இன்று ஒரேநாளில் 898 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,359 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 14,811 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com