திரிபுராவில் உள்ள 108 தொலைதூர கிராமங்களில் இணைய வசதி - துணை முதல்-மந்திரி தொடங்கி வைத்தார்

திரிபுராவில் உள்ள 108 கிராமங்களில் அம்மாநில துணை முதல்-மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா இணைய இணைப்பை தொடங்கி வைத்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அகர்தலா,

திரிபுரா துணை முதல்-மந்திரி ஜிஷ்ணு தேவ் வர்மா வெள்ளிக்கிழமை திரிபுராவில் உள்ள 108 பஞ்சாயத்துகள் மற்றும் கிராம சபைகளில் இணைய இணைப்பை தொடங்கி வைத்தார்.

இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் 4ஜி செறிவூட்டல் திட்டத்தின் கீழ் இணைய சேவைகளை அனுபவிப்பார்கள். பிஎஸ்என்எல் நிறுவனம் 129 தொலைதூர கிராமங்களில் செல்போன் டவர்களை நிறுவ உள்ளது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 583 கிராம பஞ்சாயத்துகள் உள்ளடக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களின் தகுதியை ஆய்வு செய்வதற்காக மறு ஆய்வு செய்யப்படுகிறது. மாநிலங்களுக்கான சிறப்பு உதவியின் கீழ், இரண்டு இணைய இணைப்பு திட்டங்களுக்காக, மத்திய அரசு ரூ.50 கோடியை திரிபுராவிற்கு அனுமதித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், மற்றும் அலுவலகங்களுக்கு ஃபைபர் இணைப்புகளை வழங்குதல் மற்றும் பொது வைஃபை, ஹாட்ஸ்பாட் வழங்குதல் ஆகிய இரண்டு திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பணியை மேற்கொள்ள உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com