ஜப்பான் பூகம்பத்தின் 10-வது ஆண்டு நினைவு தினம்: ‘இந்தியர்களின் உன்னதமான உதவியை ஒருபோதும் மறக்க இயலாது'; ஜப்பான் தூதர் உருக்கம்

ஜப்பான் பூகம்பத்தின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சுசுகி சதோஷி வெளியிட்ட உருக்கமான செய்தியில் கூறியிருப்பதாவது
ஜப்பான் தூதர் சுசுகி சதோஷி
ஜப்பான் தூதர் சுசுகி சதோஷி
Published on

20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலி கொண்ட ஜப்பான் பூகம்பத்தின் 10-வது ஆண்டை நினைவு கூர்கிறோம். பூகம்பம் ஏற்பட்டபோது இந்திய மக்கள் தங்கள் வீட்டிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள மக்களுக்காக தங்கள் பிரார்த்தனைகளை செய்தனர்.

மிகவும் தேவையான நிவாரணப் பொருட்களை இந்தியா வழங்கியது. வீடுகளை இழந்தவர்களுக்கு ஆயிரக்கணக்கான இந்திய போர்வைகள் சூடேற்றின. டன் கணக்கில் பிஸ்கெட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் பட்டினியை போக்கிட உதவியது. இந்த உன்னதமான உதவிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தேசிய பேரிடர் மீட்பு படையின் தைரியமான மீட்பு பணியை ஒருபோதும் மறக்க இயலாது. அவர்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய பணிக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்களுடைய தேசிய நெருக்கடியின்போது, இந்திய மக்கள் அளித்த ஆதரவுக்கும், நட்புக்கும் எவ்வளவு கடன்பட்டிருக்கிறோம் என்பதை என்னால் மிகைப்படுத்தமுடியாது. அபாயகரமான பேரழிவு குறைப்புக்கான இந்தியாவின் விருப்பத்துக்கும், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கும் நகரும்போது விரிவான பரந்த சமுதாயத்திற்காக நாங்கள் இணைந்து பணியாற்ற உறுதிபூண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com