19-வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை


19-வது மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை
x

சமீபத்தில் நடந்த தேர்வில் மாணவன் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை.

குருகிராம்,

டெல்லி அருகே உள்ள அரியானாவின் குருகிராமை சேர்ந்த ஆஷ்மன் குமார் (வயது 15) என்ற சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்வில் அவருக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண் பெற்றதால் மிகுந்த சோகத்துடன் காணப்பட்டார். இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஆஷ்மன் குமார் நேற்று முன்தினம் இரவு தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 19-வது தளத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

1 More update

Next Story