சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து பதிவு: 11 பேர் கைது

பஹல்காம் தாக்குதல் மத்திய அரசின் சதி தீட்டம் என பாகிஸ்தானிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
கவுகாத்தி,
காஷ்மீரில் உள்ள சுற்றுலா தளமான பஹல்காமில் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கொடூர தாக்குதல் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் பஹல்காம் தாக்குதலும், புல்வாமா தாக்குதலும் மத்திய அரசின் சதி தீட்டம் என பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தின் திங் தொகுதி எம்.எல்.ஏ-வான அமினுல் இஸ்லாம் என்பவரும் அந்தகைய கருத்துகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இந்தநிலையில் அவர் மீது அந்த மாநில போலீசார் தேசத்துரோக வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்தநிலையில் அசாமில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து பதிவிட்டு வந்த மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story






