மே.வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கடும் வன்முறை: 14 பேர் பலி - ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரிக்கை

மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தல் வன்முறை 14 பேர் பலி ;ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பா.ஜ.க கோரிக்கை வைத்துள்ளது.
மே.வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலில் கடும் வன்முறை: 14 பேர் பலி - ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த பாஜக கோரிக்கை
Published on

கொல்கத்தா

மேற்கு வங்க மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், அங்கு தேர்தல் தொடர்பான வன்முறையில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள 73,887 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தொடங்கியது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 11-ந்தேதி நடைபெறும். இந்த நிலையில், பல இடங்களில் அரசியல் கட்சிகளிடையே மோதல் போக்கும் காணப்பட்டது. மேற்கு வங்காளத்தில் இன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறும் சூழலில், நள்ளிரவில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே நேற்றிரவு கடும் மோதல் ஏற்பட்டது.ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் ஜில்லா பரிஷத்தில் உள்ள 928 இடங்களிலும், பஞ்சாயத்து சமிதிகளில் 9,419 இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 61,591 இடங்களிலும் போட்டியிடுகிறது. பா.ஜ.க. 897 ஜில்லா பரிஷத் இடங்களிலும், 7,032 பஞ்சாயத்து சமிதி இடங்களிலும், கிராம பஞ்சாயத்துகளில் 38,475 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்காள பஞ்சாயத்து தேர்தலில் தங்களது கட்சி தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர் என பா.ஜ.க. மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளன.ஜூன் 8ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலம் முழுவதும் பரவலான வன்முறைகள் பதிவாகியுள்ளன. ஒரு இளம்பெண் உட்பட 25 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இன்றைய வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது.கொல்லப்பட்டவர்களில் 8 பேர் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள். பா.ஜ.க., இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் ஐஎஸ்எப் ஆகிய கட்சிகள சேர்ந்த தொண்டர்கள் தலா ஒருவர் மேலும் அரசியல் அடையாளம் தெரியாத 2 நபர்களும் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற கவர்னர் சிவி ஆனந்த போஸ், வன்முறையில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com