பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று திமுக எம்.பி. டி.ஆர். பாலு மாநிலங்களவையில் பேசினார்.
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் - திமுக எம்.பி. டி.ஆர்.பாலு
Published on

புதுடெல்லி,

மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் வலியுறுத்திய மூன்று முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது.

தமிழகத்திற்கு வருவாய் தரும் முக்கிய துறைகளில் ஜவுளித்துறையும் ஒன்று. வரி உயர்வு காரணமாக ஜவுளித்துறை நெருக்கடியான சூழலில் உள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

பருத்தி உற்பத்தியாளர்கள், ஜவுளித்துறை சார்ந்தவர்களிடம் கருத்து கேட்டு முடிவு எடுக்கப்படும். பல ஆண்டுகளுக்கு பிறகு பருத்திக்கான அதிகபட்ச விலையை விவசாயிகள் பெற்று வருகின்றனர். எனவே பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும் என்று கூறினர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com