மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.
மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை தினமும் அதிகரித்தே வருகிறது. வயது வித்தியாசம் இல்லாமலும், எந்தவித பாகுபாடுமின்றியும் எல்லாரும் கொரோனா தொற்று ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 14,219 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் முழுவதும் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,02,490 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மாநிலம் முழுவதும் இன்று மேலும் 11,015 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,93,398 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று மேலும் 212 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் நோய்க்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆயிரத்து 465 ஆக உள்ளது. தற்போது வரை 1,68,126 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com