2014-2016 ஆண்டுகளில் நாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 1,10,333

நாட்டில் 2014-2016 ஆண்டுகளில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றது.
2014-2016 ஆண்டுகளில் நாட்டில் கற்பழிப்பு வழக்குகளின் எண்ணிக்கை 1,10,333
Published on

புதுடெல்லி,

நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான தண்டனைகளையும் கடுமையாக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி கிரெண் ரிஜிஜு நாடாளுமன்ற மேலவையில் எழுத்துப்பூர்வ கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதிலில், 2014-16 ஆண்டுகளில் நாட்டில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 333 கற்பழிப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன என தெரிவித்துள்ளார்.

அவற்றில் கடந்த 2016ம் ஆண்டில் 38,947 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 34,651 வழக்குகளும் மற்றும் 2014ம் ஆண்டில் 36,735 வழக்குகளும் பதிவாகி உள்ளன.

இதேபோன்று பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எண்ணிக்கையில் கடந்த 2016ம் ஆண்டில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 954 வழக்குகளும், 2015ம் ஆண்டில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 243 வழக்குகளும், 2014ம் ஆண்டில் 3 லட்சத்து 39 ஆயிரத்து 457 வழக்குகளும் பதிவாகி உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com