ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் இன்று 1,118 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெலிவரி - ரெயில்வே நிர்வாகம் தகவல்

ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மூலம் இதுவரை 13,319 மெட்ரிக் டன் ஆக்சிஜனை 13 மாநிலங்களுக்கு அனுப்பியிருப்பதாக ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் ரெயில்கள் மூலம் இன்று 1,118 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெலிவரி - ரெயில்வே நிர்வாகம் தகவல்
Published on

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக சிகிச்சைக்கான மருத்துவ ஆக்சிஜனின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ஆக்சிஜன், மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே கொரோனாவால் எழுந்துள்ள ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்வதற்கு ரெயில்வேயும் களத்தில் இறங்கி இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சிறப்பு ரெயில்கள் மூலம் பல்வேறு மாநிலங்களுக்கு ஆக்சிஜன் டேங்கர்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இதில் கடந்த ஏப்ரல் 24-ந்தேதி முதல் இன்று வரை 208 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தங்கள் பயணத்தை முடித்திருப்பதாகவும், இதில் 814 டேங்கர்களில் ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் ரெயில்வே கூறியுள்ளது. இன்று ஒரே நாளில் 1,118 மெட்ரிக் டன் ஆக்சிஜன் டெலிவரி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை மொத்தம் 13 மாநிலங்களுக்கு 13,319 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை அனுப்பியிருப்பதாகவும் இந்திய ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com