

மும்பை,
மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதில் கடந்த 2 வாரங்களில் மாநிலத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் இன்று மாநிலத்தில் புதிதாக 3 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 900- ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மாநிலத்தில் மேலும் 208-பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 739 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல மும்பையில் புதிதாக 1144 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நகரில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 625 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மும்பையில் மேலும் 38 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதனால் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 962 ஆக அதிகரித்து உள்ளது.