இந்தியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது
இந்தியாவில் மேலும் 116 பேருக்கு கொரோனா தொற்று
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் தற்போது கொரேனா தெற்றால் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாடு முழுவதும் தற்போது கொரேனா தெற்றால் பாதிக்கப்பட்ட நேயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், கர்நாடகாவில் மூன்று உயிரிழப்பும் பதிவாகியிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதோடு நாடு முழுவதும் மொத்தமாக இதுவரை 4,44,72153 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 5,33,337 பேர் இறந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com