நாடு முழுவதும் 11,717 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், தற்போது கருப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வருகிறது. வடமாநிலங்களில் இந்த நோய்த்தொற்று பரவலாக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை தொற்று என்பது புதியது இல்லை. கெரோனா தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே அதனால் பாதிக்கப்படுவோர் இருந்து வந்தனர். குறிப்பாக கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், ரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் அல்லது மீண்ட நோயாளிகள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு வருவதால் பாதிப்பு எண்ணிக்கைகணிசமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, குஜராத், கர்நாடகா, உத்தரகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில், கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் சிலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் 236 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை மந்திரி சதானந்த சவுடா தனது டுவிட்டரில், நாடு முழுவதும் இதுவரை 11,717 பேர் கறுப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக குஜராத் மாநிலத்தில் 2,859 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகத்தில் மட்டும் 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை சிகிச்சைக்கு கூடுதலாக 29,250 ஆம்போமெரிசின் பி குப்பிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்திற்கு 600 மருந்து குப்பிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அதில் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com