டெல்லியில் பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக 12 பேர் கைது எனத்தகவல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 12 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லியில் பிரதமரை விமர்சித்து போஸ்டர் ஒட்டியதாக 12 பேர் கைது எனத்தகவல்
Published on

புதுடெல்லி,

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சுவரொட்டி (போஸ்டர்) ஒட்டியதற்காக 12 பேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று விவகாரத்தை பிரதமர் மோடி கையாண்ட விதம் குறித்து விமர்சித்து டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.

நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்ட அந்த சுவரொட்டியில், "நமது குழந்தைகளின் தடுப்பூசிகளை எதற்காக வெளிநாடுகளுக்கு அனுப்புனீர்கள் பிரதமர் நரேந்திர மோடி?" என்று குறிப்பிட்டிருந்ததாக டெ காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவ்ல்துறை வட்டாரங்கள் கூறியதாக பிரபல தனியார் ஆங்கில தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com