உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?

உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்து 12 பேர் பலி?
Published on

கோண்டா,

உத்தரபிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் உம்ரிபேகம் கஞ்ச் பகுதியில் விவசாயிகள் சிலர் தங்கள் வயலுக்கு செல்வதற்காக படகில் காக்ரா ஆற்றை கடக்க முயன்றனர். அந்த படகில் மொத்தம் 25 பேர் இருந்தனர். அப்போது அந்த படகு ஒரு பாலத்தில் மோதி கவிழ்ந்தது. படகில் இருந்த அனைவரும் ஆற்றில் விழுந்தனர். இதில் 14 பேரை அங்கிருந்தவர்கள் உதவியுடன் போலீசார் மீட்டனர்.

அவர்களில் 2 பேரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அதில் ஒருவர் இறந்துவிட்டார். எஞ்சிய 11 பேரின் கதி என்ன ஆனது என்பது தெரியவில்லை. அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. நீரில் மூழ்கும் வீரர்கள் வரவழைக்கப்பட்டு மாயமானவர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com