மேற்கு வங்காளத்தில் மேலும் 12 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்

பா.ஜனதாவினருக்கு ஆதரவாக செயல்படும் பலர் தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.
மேற்கு வங்காளத்தில் மேலும் 12 போலீஸ் உயர் அதிகாரிகள் இடமாற்றம்
Published on

கொல்கத்தா,

மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 23 மற்றும் 29-ந்தேதிகளில் 2 கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இங்கு சுமார் 500 அரசு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ஆளும்கட்சியாக இருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

பா.ஜனதாவினருக்கு ஆதரவாக செயல்படும் பலர் தேர்தல் அதிகாரி பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இந்த நிலையில் அங்கு மேலும் 12 போலீஸ் அதிகாரிகள் தேர்தல் கமிஷனால் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ள தகவல் வெளியாகி இருக்கிறது. சி.ஐ.டி. பிரிவு போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த சோமாதாஸ் மித்ரா, குற்றப்பிரிவு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதேபோல சிறப்பு அதிரடிப்படை டி.ஐ.ஜி. தேபஸ்மிதாதாஸ், கொல்கத்தா உளவுப்பிரிவு இணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதேபோல 12 அதிகாரிகளை இடமாற்றம் செய்து தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com