12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

மாநிலங்களவையை சேர்ந்த 12 எம்.பி.க்கள் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
12 எம்.பி.க்கள் இடைநீக்கம்: மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு
Published on

புதுடெல்லி,

அமளியில் ஈடுபட்டதற்காக மாநிலங்களவையில் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அந்த எம்.பி.க்கள் தங்கள் செயல்பாட்டுக்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும், தங்கள் தவறை உணர வேண்டும். அவர்கள் அவையிடம் மட்டுமல்ல, நாட்டு மக்களிடமும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எதற்காக வருத்தம் தெரிவிக்க வேண்டும்? மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பியதற்காகவா? என்று கேள்வி கேட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com