சத்தீஷ்கரில் என்கவுன்ட்டர்: 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த என்கவுன்டரில் 12 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கரில் என்கவுன்ட்டர்: 12 நக்சலைட்டுகள் சுட்டுக் கொலை
Published on

ராய்பூர்,

சத்தீஷ்கர் மாநிலம்  பிஜாப்பூர் மாவட்டத்தில் இந்திராவதி தேசிய பூங்காவில் உள்ள வனப்பகுதியில் பாதுகாப்பு படையினர் நக்சல்களை தேடி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது,  அங்கு பதுங்கியிருந்த நக்சல்கள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

இதையடுத்து பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பினர் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 12 நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. முன்னதாக, கடந்த வாரம் இம்மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 8 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com