சத்தீஷ்கார்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்காரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் நக்சலைட்டுகள் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
சத்தீஷ்கார்: பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Published on

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர், மராட்டியம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இந்த நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு தனிப்படை போலீசாருடன் இணைந்து மத்திய ரிசர்வ் போலீசாரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சத்தீஷ்கார் மாநிலம் கட்சிரோலி மாவட்டம் வன்டொலி கிராமம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த பகுதி மராட்டிய மாநில எல்லையோரம் அமைந்துள்ளது.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் இன்று வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்புப்படையினரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 12 நக்சலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த என்கவுண்ட்டர் சம்பவத்தில் பாதுகாப்புப்படையை சேர்ந்த 2 வீரர்கள் காயமடைந்தனர். அதேவேளை, என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com