மராட்டியத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து- நோயாளிகள் 13 பேர் உயிரிழப்பு

மராட்டிய மாநிலத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மராட்டியத்தில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து- நோயாளிகள் 13 பேர் உயிரிழப்பு
Published on

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புடன் கிட்டதட்ட 7 லட்சம் பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மராட்டியத்தில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பல்கார் மாவட்டம் வாசை என்ற இடத்தில் அமைந்துள்ள கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக அங்கிருந்த நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வாசையில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 13 பேர் தீ விபத்து காரணமாக உயிரிழந்ததுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் அடுத்தடுத்து நடைபெறும் இது போன்ற நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com