குஜராத்தில் மர்மக்காய்ச்சலுக்கு 12 பேர் பலி

சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளது.
குஜராத்தில் மர்மக்காய்ச்சலுக்கு 12 பேர் பலி
Published on

அகமதாபாத்,

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள லக்பத் பகுதியில் 12 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகள் உட்பட 12 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் எந்த வகை காய்ச்சல் பரவி வருகிறது என மருத்துவர்களால் துல்லியமாக கண்டறிய முடியவில்லை.

சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் மழை பெய்த நிலையில், தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. சளி, இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் 22 கண்காணிப்பு குழுக்கள், மருத்துவர்கள் இணைந்து தடுப்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com