டெல்லியில் கடும் பனி மூட்டம்: 12 ரயில்கள் தாமதம்

டெல்லியில் கடும் பனி மூட்டம் நிலவியது. இதன் காரணமாக 12 ரயில்கள் தாமதம் ஆகின.
டெல்லியில் கடும் பனி மூட்டம்: 12 ரயில்கள் தாமதம்
Published on

புதுடெல்லி,

தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே அதிகாலை நேரங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இன்றும் அதே நிலை நீடித்தது. பனிப்படலமாக காட்சியளித்ததால், குறைந்த அளவு தூரமே கண்ணுக்கு புலப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டனர். டெல்லிக்கு வரவேண்டிய 12 ரயில்கள் இன்று தாமதம் ஆகின.

X

Daily Thanthi
www.dailythanthi.com