ஓடும் ரயில் கழிவறையில் வைத்து 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
ஓடும் ரயில் கழிவறையில் வைத்து 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
Published on

ஐதராபாத்,

தெலங்கானா மாநிலத்தில் ஓடும் ரயில் கழிவறையில் வைத்து 12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 20 வயது சக பயணி கைது செய்யப்பட்டார். சிறுமி தனது குடும்பத்தினருடன் ரயிலில் பயணித்தார்.

அப்போது தெலுங்கானா நோக்கி ரெயில் வந்தபோது, சிறுமி கழிவறைக்குச் சென்றுள்ளார். இதனை வெகு நேரமாக நோட்டமிட்ட சக பயணி பின்தொடர்ந்து சென்று கழிவறையில் வைத்து அவரை வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்துள்ளார்.

சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து தனது பெற்றோரிடம் கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். யதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com