

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் இன்று மேலும் 1,224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 29,42,250 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு மேலும் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37,206 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1,668 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28,85,700 ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் தற்போது வரை 19,318 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.