

பெங்களூரு,
கர்நாடகாவில் இன்று மேலும் 1,229-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,289- ஆகும். தொற்று பாதிப்பால் 13 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.
மாநிலத்தில் தொற்று பாதிப்பு விகிதம் 0.66 சதவிகிதமாக உள்ளது. கர்நாடகாவில் தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 18,897- ஆக உள்ளது. தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 1 லட்சத்து 83 ஆயிரத்து 642 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.