வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு 124 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆதரவு

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு 124 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாக்காளர் பட்டியல்
கோப்பு படம்
Published on: 

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.

இந்நிலையில், 124 முன்னாள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகள் இந்திய மக்களுக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்பது வாக்காளர்களை நீக்கும் ஆயுதம் அல்ல. வாக்காளர் பட்டியலை சுத்தப்படுத்தும் செயல். சுத்தப்படுத்தப்ப டாத வாக்காளர் பட்டியல், வாக்காளரை பாதுகாக்காது, மோசடியாளரைத் தான் பாதுகாக்கும்.

பாதுகாப்பு அம்சங்கள்

தகுதியற்ற வாக்காளர்களை இப்பணி நீக்குகிறது. இதில் சில அசவுகரியங்கள் இருக்கலாம். இது எல்லா பெரிய முன்முயற்சிகளிலும் இருப்பதுதான்.ஒரு காலத்தில் வாக்குச்சாவடிகளை கைப்பற்றுதல், வாக்குச்சீட்டுகளை பறித்தல் போன்ற வன்முறை சம்பவங்கள் நடந்தன.

அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய தேர்தல் முறை பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் 'விவிபாட்' எந்திரத் தில் வெளிவரும் ரசீது மூலம் சரிபார்க்கப்படுகின்றன. வாக்குச்சாவடிகளில் அரசி யல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டு, பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்படுகின்றன. அங்கு வேட்பாளர்கள் கண்காணிக்கலாம்.

நிரூபிப்பது கடமை

வாக்காளர் சேர்க்கையில் நோட்டீஸ், 2 தடவை மேல்முறையீடு என வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் முகவர்களும் இதில் பங்கேற்கிறார்கள். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்துள்ளது. அதை செய்வதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. கேள்வி கேட்பது ஒவ்வொரு குடிமகனின் உரிமை. ஆனால் நிரூபிப்பது கடமை. தேர்தலில் முறைகேடு செய்ய வேண்டுமென்றால், ஆயிரக்கணக்கான அதிகாரிக ளையும், பல்வேறு அரசியல் கட்சிகளின் முகவர்களையும் மவுனமாக்க வேண் டும். இத்தகைய சதிக்கு வாய்ப்பு இல்லை.

வென்றால் நேர்மையானதா?

இதே தேர்தல் முறையில்தான் ஆளுங்கட்சியான பா.ஜனதா, இமாசலபிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, ஜார்கண்ட், காஷ்மீர் ஆகிய மாநில சட்டசபை தேர் தல்களில் தோல்வி அடைந்தது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற தவறியது. அப்போது வென்றவர்கள் புகார் சொல்ல வில்லை.எனவே, தான் வெற்றி பெற்றால் நேர்மையான முறை, தோல்வி அடைந்தால் அது முறைகேடான முறை என்று எந்த முறையும் இருக்க முடியாது. நீங்கள் முறைகேடு என்று சொல்லும் தேர்தல் முறைதான் உங்களுக்கு வெற்றியும் தந் துள்ளது. நீங்கள் சந்தேகப்படுவது அந்த தேர்தல் முடிவையா? இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com