மராட்டியத்தில் இன்று மேலும் 12,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று மேலும் 12,614 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மராட்டியத்தில் இன்று மேலும் 12,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவமாடி வருகிறது.இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 12,614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,84,754 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் இன்று மேலும் 322 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,749 ஆக அதிகரித்துள்ளது.

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் அதிகபட்சமாக 6,844 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,08,286 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 1,56,409 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com