நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற 13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வு கட்டணத்தை திரும்பப் பெற 13 லட்சம் மாணவர்கள் விண்ணப்பம்
Published on

புதுடெல்லி,

நாடு முழுவதும் கடந்த 3-ந்தேதி நடந்த 'நீட்' தேர்வின் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து டெல்லி, ஜெய்ப்பூர், குருகிராம் மற்றும் மராட்டியத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகளால் நீட் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், தேர்வு கட்டணத்தை திரும்ப பெற இதுவரை 13 லட்சம் மாணவர்கள் தங்களது வங்கி விவரங்களை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வங்கி விவரங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது வங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்து கட்டணத்தை பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21-ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com