தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியில் அரசின் தீவிர முயற்சியால் கொரோனா பரவல் வேகம் கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஒரு மாதமாக இங்கு பெரும்பாலான நாட்கள் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை குறைந்தே வருகிறது.

இந்தநிலையில் தாராவியில் இன்று மேலும் 13 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 2,573 ஆக உயர்ந்துள்ளது. தற்போது வரை 2,493 பேர் குணமடைந்துள்ள நிலையில், 80 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com