

இம்பால்,
மணிப்பூரில் பெண்களின் ஆபாசப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி, சட்டவிரோதமாகப் பணம் சம்பாதித்த சிறுவன் உள்பட 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் பேரில், போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அவர்களை கைது செய்தனர்.
கைதானவர்களிடம் இருந்து 14 செல்போன்கள், 1 மடிக்கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தப்பட்ட 38 சமூக வலைதள பக்கங்களை சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக முடக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.