திரிபுராவில் கடந்த 3 ஆண்டுகளில் 130 வங்காள வகுப்பு பள்ளிகள் ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றம்

திரிபுராவில் கடந்த 3 ஆண்டுகளில் 130 வங்காள வகுப்பு பள்ளிகள் ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றப்பட்டு உள்ளன.
திரிபுராவில் கடந்த 3 ஆண்டுகளில் 130 வங்காள வகுப்பு பள்ளிகள் ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றம்
Published on

அகர்தலா,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் பல்வேறு வகுப்பு பள்ளிகளை ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றம் செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன. திரிபுரா கல்வி மந்திரி ரத்தன்லால் நாத், புதிதாக ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளுக்கான தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளில் அதிகரிக்கப்பட்டு உள்ள ஆங்கில வகுப்பு பள்ளிகளின் எண்ணிக்கை 257 ஆக உயர்ந்து உள்ளது. இந்த காலகட்டத்தில் மொத்தம் 130 வங்காள வகுப்பு பள்ளிகள் ஆங்கில வகுப்பு பள்ளிகளாக மாற்றப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com