தெலுங்கானா இடைத்தேர்தலில் 130 பேர் மனு தள்ளுபடி

211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஜூபிலி ஹில்ஸ் தொகுதியில் நவம்பர் 11-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறகிறது. பாரத ராஷ்டிர சமிதி சார்பில் மறைந்த எம்.எல்.ஏ. கோபிநாத்தின் தின் மனைவி சுனிதா போட்டியிடுகிறார். அங்கு பிராந்திய வெளிவட்டச் சாலைத் திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் மாநில அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நூற்றுக்கும் மேற்பட்டோர் மனுதாக்கல் செய்ய குவிந்ததால் நள்ளிரவைத் தாண்டியும் மனுக்கள் பெறப்பட்டன.
211 வேட்பாளர்களுக்காக மொத்தம் 321 வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டன. சிலர் இருமுறை வேட்புமனு தாக்கல் செய்தனர்.இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மனுவை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.






