இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் 13 ஆயிரம் கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 2021-22 நிதியாண்டில் 13 ஆயிரம் கோடிக்கு பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதி
Published on

புதுடெல்லி,

கடந்த 2021- 22 நிதியாண்டில் ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை படைத்துள்ளது. அந்த நிதியாண்டில் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. அதில் 70 சதவீதம் தனியார் நிறுவனங்களில் இருந்தும், 30 சதவீதம் பொதுத்துறை நிறுவனங்களில் இருந்தும் ஏற்றுமதி ஆகியுள்ளது.

அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் தென் கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. முக்கியமாக கடந்த ஜனவரி மாதம் ரூ.2,770 கோடி மதிப்பில் பிரமோஸ் ஏவுகணை பிலிப்பைன்ஸ் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. தொடர்ந்து, இந்தோனேசியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கும் அந்த ஏவுகணை ஏற்றுமதி செய்வதற்கு வழி வகுத்தது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட தற்போது பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 2020 21 நிதியாண்டில் ரூ.8,434 கோடி அளவுக்கும், ரூ.2019-20 ல் ரூ.9,115 கோடிக்கும், ரூ.2015- 16 ல் ரூ.2,059 கோடி அளவுக்கும் ஏற்றுமதி ஆகியிருந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com