மத்திய பிரதேசத்தில் புதிதாக 1,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

போபால்,

மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று புதிதாக 1,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,13,050 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் இன்று மேலும் 12 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,326 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 1,449 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், இதுவரை 1,96,192 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும் தற்போது மருத்துவமனைகளில் 13,532 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மத்திய பிரதேச மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com