1,365 ஐஏஎஸ், 703 ஐபிஎஸ் காலி பணியிடங்கள் உள்ளன- மத்திய அரசு தகவல்

இந்திய நிர்வாகப் பணியில் (ஐஏஎஸ்) 1,365 இடங்களும், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 703 இடங்களும் காலியாக உள்ளன.
1,365 ஐஏஎஸ், 703 ஐபிஎஸ் காலி பணியிடங்கள் உள்ளன- மத்திய அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் ராஜ்யசபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு உள்ளதாவது:-

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஒவ்வொரு ஆண்டும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பணிகளில் நேரடி ஆட்சேர்ப்பு அடிப்படையில் காலியிடங்களை நிரப்புவதற்காக சிவில் சர்வீசஸ் தேர்வுகளை (சிஎஸ்இ) நடத்துகிறது.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவி உயர்வு ஒதுக்கீட்டில் காலியிடங்களை நிரப்ப, மாநில அரசுகளுடன் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுக் குழு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

சிஎஸ்இ-2022 வரை ஐஏஎஸ் அதிகாரிகளின் வருடாந்திர சேர்க்கையை 180 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

இந்திய நிர்வாகப் பணியில் (ஐஏஎஸ்) 1,365 இடங்களும், இந்தியக் காவல் பணியில் (ஐபிஎஸ்) 703 இடங்களும் காலியாக உள்ளன.

இவை தவிர, இந்திய வனப் பணியில் (ஐஎப்எஸ்) 1,042 காலியிடங்களும், இந்திய வருவாய் சேவையில் (ஐஆர்எஸ்) 301 இடங்களும் காலியாக உள்ளன.

காலி பணியிடங்கள் ஏற்படுவதும், நிரப்புவதும் தொடர் நடவடிக்கையாகும். காலி பணியிடங்களை விரைந்து நிரப்புவது மத்திய அரசின் முயற்சியாக உள்ளது என கூறி உள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com