14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்

சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை திடீரென பணி இடாமற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. சாம்ராஜ்நகர் கலெக்டர்
14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் திடீர் பணி இடமாற்றம்
Published on

பெங்களூரு:-

கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைந்துள்ளது. இதையடுத்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, காத்திருப்போர் பட்டியலில் உள்ள நவீன்ராஜ்சிங், வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் உஜ்வல்குமார் கோசுக்கு நில கையகப்படுத்துதல் மற்றும் ஆவணங்கள் துறை கமிஷனர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. காத்திருப்போர் பட்டியலில் சுஷ்மா கோட்பலேகர்நாடக மதிப்பீட்டு ஆணைய தலைமை மதிப்பீட்டு அதிகாரியாகவும், காத்திருப்போர் பட்டியலில் உள்ள யஷ்வந்த் குருகர் சீர்மிகு நிர்வாக மைய செயல் இயக்குனராகவும், சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் ரமேஷ் தோட்டக்கலைத்துறை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சர்க்கரை நிறுவனம்

காத்திருப்போர் பட்டியலில் உள்ள பொம்மலா சுனில்குமார் கர்நாடக மாநில பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனராகவும், சுவர்ண ஆரோக்கிய சுரக்ஷா டிரஸ்டு செயல் இயக்குனர் சதீஸ் மைசூருவில் உள்ள நிர்வாக பயிற்சி நிறுவன இணை இயக்குனராகவும், கர்நாடக முனிசிபல் தரவு சங்க இணை இயக்குனர் கோபால் கிருஷ்ணா தொழிலாளர் நலத்துறை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

காத்திருப்போர் பட்டியலில் உள்ள ரவிக்குமார் மைசூரு சர்க்கரை நிறுவன நிர்வாக இயக்குனராகவும், தகவல்-உயிரி தொழில்நுட்பத்துறை இயக்குனர் மீனா நாகராஜ் சிக்கமகளூரு மாவட்ட கலெக்டராகவும், அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை செயலாளர் ஆனந்த் தட்சிண கன்னடா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், மைசூரு மின் வினியோக நிறுவன (செஸ்காம்) நிர்வாக இயக்குனர் ஜெயவிபவசாமி கர்நாடக கனிம நிறுவன நிர்வாக இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோலார் மாவட்ட பஞ்சாயத்து

கர்நாடக மாநில பேரிடர் நிர்வாக ஆணைய கமிஷனர் பிரபு துமகூரு மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாகவும், கோலார் மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரி உகேஷ்குமார் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை துணை செயலாளராகவும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com