இன்ஸ்டாவில் 14 லட்சம் பாலோயர்ஸ்... தேர்தலில் வெறும் 33 ஓட்டுகள் - ராஜஸ்தான் பிரபலத்தின் அதிர்ச்சி தோல்வி

ஓம்பிரகாஷ் பெற்ற 33 வாக்குகளை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரே செலுத்தியுள்ளனர்.
இன்ஸ்டாவில் 14 லட்சம் பாலோயர்ஸ்... தேர்தலில் வெறும் 33 ஓட்டுகள் - ராஜஸ்தான் பிரபலத்தின் அதிர்ச்சி தோல்வி
Published on: 

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஓம்பிரகாஷ் பிஷ்னோய். சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்த இவருக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 14 லட்சம் பாலோயர்ஸ் உள்ளனர். இது தவிர பேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட தளங்களிலும் இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தனக்கு சமூக வலைதளங்களில் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என ஓம்பிரகாஷ் பிஷ்னோய் முடிவு செய்தார். அதன்படி தனது பகுதியில் நடந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் அவர் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்திற்காக தனது சமூக வலைதள பக்கங்களை அவர் பயன்படுத்தினார்.

ஆனால் வாக்கு எண்ணிக்கை நாளன்று அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த கிராமத்தில் மொத்தம் 1,600 வாக்காளர்கள் உள்ள நிலையில், ஓம்பிரகாஷ் பிஷ்னோய் வெறும் 33 வாக்குகள் மட்டுமே பெற்று மோசமான தோல்வியை சந்தித்தார். அந்த 33 வாக்குகளை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஆகியோரே செலுத்தியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இருப்பினும் இந்த தோல்வியால் மனமுடைந்து போகவில்லை என்று தெரிவித்துள்ள ஓம்பிரகாஷ், சமூக வலைதளத்தில் எவ்வளவு பிரபலமாக இருந்தாலும், தேர்தல் என்று வரும்போது மக்களுடன் களத்தில் இறங்கி பணியாற்றுவது மிகவும் முக்கியம் என்பதை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

X