மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் பலி

மராட்டியத்தில் இதுவரை 31,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று; ஒருவர் பலி
Published on

புனே,

நாட்டில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று உறுதியானது. தொடர்ந்து நாடு முழுவதும் பரவல் அதிகரித்தது. பின்பு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்நிலையில், நாட்டில் மீண்டும் புதிதாக கொரோனா தொற்று பரவி வருகிறது. எனினும், அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில், மராட்டியத்தில் புதிதாக 14 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இவர்களில் 4 பேர் மும்பையை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர தானே (1), புனே (1), புனே மாநகராட்சி பகுதி (7) மற்றும் நாக்பூர் (1) ஆகிய பகுதிகளில் பதிவாகி உள்ளன.

இதனால், இந்த ஆண்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,547 ஆக அதிகரித்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது. இதேபோன்று, நாக்பூரை சேர்ந்த ஒருவர் தொற்றால் பலியாகி உள்ளார் என உறுதியாகி உள்ளது.

இதனையடுத்து, கடந்த ஜனவரியில் இருந்து கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 38 பேருக்கு இணை நோய்கள் உள்ளன. மராட்டியத்தில் இதுவரை 31,804 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 2,436 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com