கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மராட்டியத்தில் இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று புதிதாக 3,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

மும்பை,

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி உள்ள கொடிய கொரோனா இந்தியாவையும் புரட்டி போட்டுள்ளது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. இங்கு கொரோனா புதிய வேகமெடுத்து பரவி வருகிறது.

இந்த நிலையில் இன்று மராட்டியத்தில் புதிதாக 3 ஆயிரத்து 827 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மராட்டியத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,24,331 ஆக அதிகரித்து உள்ளது.

இதே போல மாநிலத்தில் ஒரே நாளில் 142 பேர் நோய் தொற்றுக்கு பலியானார்கள். மாநிலத்தில் இதுவரை ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 893 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 1935 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62,773 ஆக உயர்ந்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com