கர்நாடக மாநிலத்தில் புதிதாக 2,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கர்நாடகாவில் இன்று புதிதாக 2,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் புதிதாக 2,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,313 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 57 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் கர்நாடகாவில் தற்போது கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 543 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 1,003 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 13,836 ஆக உயர்ந்துள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் தற்போது 19,035 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 472 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com