

புதுடெல்லி,
நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்து வருகின்றன. கொரோனாவின் 2-வது அலை கட்டுக்குள் இருந்தபோதும் தடுப்பூசி போடுவது தொடர்கிறது. மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு தடுப்பூசிகளை தொடர்ந்து வினியோகித்து வருகிறது.
தற்போது மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் பொதுமக்களுக்கு செலுத்துவதற்காக 14 கோடியே 68 லட்சத்து 60 ஆயிரத்து 146 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.